இலவசக் கல்வி இலங்கையில் சிறந்த மாற்றங்களை உருவாக்கியுள்ளது!

Saturday, January 11th, 2020


இலவசக் கல்வி முறைமை இலங்கையில் சிறந்த மாற்றங்களை உருவாக்கியுள்ளது. அதனை நாம் எப்போதும் பாதுகாக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டுகருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் துறையில் கற்பதற்கு பண வசதியுள்ளவர்கள், வெளிநாடுகளுக்கு செல்லாது உயர் கல்வியை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாது அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களும், தனியார் கல்வி நிறுவனங்களும் உயர் தரம்வாய்ந்த கல்வியை வழங்குவதாக உறுதியளித்தால் இலங்கையில் கல்விக்காக வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க முடியும் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் மார்க்கமாக உயர் கல்வித் துறையை மாற்ற முடியும் என்றார்.

Related posts: