இன்றுமுதல் கடவுச்சீட்டு கட்டணத்தில் மாற்றங்கள்!

Saturday, June 1st, 2019

கடவுச்சீட்டுக்காக அறவிடப்படும் கட்டணத்தில் இன்றுமுதல் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, பொதுவான கடவுச்சீட்டுக்கான கட்டணம் 3000 ரூபாவில் இருந்து 3500 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. ஒரு நாள் சேவையில் விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டுக்கான கட்டணம் ரூபா 10,000 இல் இருந்து 15,000 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது.

16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கடவுச்சீட்டு கட்டணம் ரூபா 2000 இல் இருந்து ரூபா 2500 ஆக அதிகரிக்கப்படுகின்றது.

ஒரே நாளில் விநியோகிப்பதற்கான கட்டணம் 5000 ரூபாவில் இருந்து 7500 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது.

கடவுச்சீட்டு திருத்தங்களை மேற்கொள்வதற்கான கட்டணம் 500 இல் இருந்து 1000 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது.

Related posts:

ரணிலுக்காக மக்களை விரட்டி விரட்டி பிடித்த விஜயகலாவும் ஆர்னோல்ட்டும் – அதிர்ப்தியில் உத்தியோகத்தர்கள...
ஒருசிலரது சுயநலன்களே மாநகரம் வெள்ளதத்தில் மூழ்க காரணம் – ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் றெமீடியஸ...
இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவதால் எந்த பிரச்சினையும் ஏற்படாது - குழந்தைகள...