அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களையும் சந்திக்கவுள்ள மகிந்த தேசப்பிரிய!

Wednesday, October 2nd, 2019


ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிவிருக்கும் சகல வேட்பாளர்களையும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. குறித்த சந்திப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவில், இன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்கள், கட்டுப்பணம் செலுத்தியிருக்கும் சுயேட்சைக்குழுக்கள், போட்டியிடவிருப்பதாக அறிவித்துள்ளோர், அக்கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் பிரதிநிதிகளே இந்த சந்திப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான சட்டத்திட்டங்கள், விதிமுறைகள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் செயற்பாடுகளுக்காகவே அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: