அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் – பெப்பரல் !

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பிரதான அரசியல் கட்சிகளின் வாக்குகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என பெப்பரல் அமைப்பு வலியுறுத்துவதாக அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
பிரதான அரசியல் கட்சிகளுக்கு மேலதிகமாக இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 17 அரசியல் குழுக்கள் விருப்பம் வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பல கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதன் காரணமாக வாக்குகள் சிதறடிக்கப்படுகின்றன.
இதன் காரணமாக உரிய ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வதற்கான வாய்ப்பு இல்லாது போகும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
பரீட்சைகளுக்குரிய விண்ணப்பங்கள் அனைத்தும் இனி இணையம் மூலம் விண்ணப்பிக்க முடியும்!
வெளிநாடுகளில் தொழில் செய்யபவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் – பிரதமர்!
துறைமுக ஊழியர்களுக்கு 5,580 மில்லியன் ரூபா மேலதிக கொடுப்பனவாக செலுத்தப்பட்டுள்ளது - கோப் குழு தெரிவி...
|
|