ஹீத்ரோ விமான நிலையத்தில் புதிய ஓடுதளம் அமைக்க ஒப்புதல்!

ஐரோப்பாவின் அதிக விமானப் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இலண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில், புதிய ஓடுதளத்தை அமைப்பதற்கான திட்டத்திற்கு பிரித்ததானிய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
விமான நிலைய விரிவாக்க உரிமையில், தனது போட்டியாளரான மற்றும் தன்னை விட சிறிய விமான நிலையமான காட்விக் விமான நிலையத்தோடு, ஹீத்ரோ போட்டியிட்டுக்கொண்டிருந்தது. ஐக்கிய ராஜ்யத்தின் விமான தள தாங்குதிறனை அதிகப்படுத்துவது பெரிய அளவில் சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்து வந்துள்ளது. மேலும், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் , பல தசாப்தங்களாக இதில் இறுதி முடிவை எடுப்பதை தள்ளி வைத்துக்கொண்டே வந்தன.
பொருளாதாரத்திற்கு விமான தள விரிவாக்கம் அத்தியாவசியமானது என வணிக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.விமர்சகர்கள் அது சுற்றுச்சூழலை சேதப்படுத்துவதாகவும், மிகவும் செலவு பிடிப்பதாகவும் இருக்கும் என்று கூறுகின்றனர்.ஒரு ஆண்டுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த திட்டம் குறித்து வாக்களிப்பார்கள்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் கிரிஸ் கிரேலிங், ”ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக வாக்களித்ததை அடுத்து , பிரிட்டன் வர்த்தகத்திற்கு, திறந்துவிடப்பட்டுள்ளது என்பதற்கான தெளிவான சமிஞ்கை தான் இன்றைய அறிவிப்பு, ” என்றார். இந்த விவகாரத்தில், சட்ட சவால்களும் எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
|
|