வைத்தியசாலைகளுக்கு தேவையான உபகரணங்களை பெற்றுக்கொள்ள உதவுங்கள் – இலங்கையின் செல்வந்தர்களிடம் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி கோரிக்கை!

Sunday, May 16th, 2021

கொரோனா நோயாளிகளுக்கான வைத்தியசாலைகளில் தேவையான வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கையிலுள்ன செல்வந்தர்களிடம் இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோ புள்ளே கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் வைத்தியசாலைகளில் சிகிச்சைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைகளில் ஒட்சிசனுக்கான தேவை அதிகரித்துள்ளதாகவும் தீவிர சிகிச்சைப் பிரிவு எண்ணிக்கைகளை அதிகரிக்க நேரிட்டுள்ளதாகவும் அதற்கான உபகரணங்கள் அதிகளவில் தேவைப்படுவாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் தங்களது பிரதேசங்களில் காணப்படும் வைத்தியசாலைகளுடன் இணைந்து தேவையான உதவிகளை வழங்குமாறு செல்வந்தர்களிடம் அமைச்சர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: