வேலணையில் சிறப்பாக நடைபெற்ற பிரதேச முன்பள்ளி சிறுவர் ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வு!

Friday, October 7th, 2022

உலக சிறுவர் தினம் மற்றும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்றையதினம் வேலணை பிரதேச சபை முன்பள்ளியால் முன்பள்ளிச் சிறுவர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது

வேலணை பிரதேச சபையின் தேவ திறந்தவெளி அரங்கில் பிரதேச சமையின் வேலணை உப – அலுவலக பொறுப்பதிகாரி யசிந்தன் தலைமையில் நேற்று 06.10.2022) காலை வெகுசிறப்பாக நடைபெற்றது.

குறித்த நிகழ்வின் பிரதம அதிதியாக சபையின் தவிசாளர் நமசிவாயம் கருணாகரமூர்த்தியும் சிறப்பு விருந்தினராக முன்பிள்ளைப்பிராய அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சயானி பாலமுரளியும்,

கௌரவ விருந்தினராக வேலணை பிரதேச சபையின் செயலாளர் தியாகச்சந்திரனும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்ததுடன் முன்பள்ளி ஆசிரியர்களையும் முன்பள்ளிச் சிறார்களையும் கௌரவித்து சிறப்பு பரிசில்களையும் நினைவும் பொருள்களையும் வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: