வெளியேற்றப்படும் குப்பைகள் தொடர்பில் விரைவில் சுற்றுநிருபம்!

அரச நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் தரம் பிரித்து வெளியேற்றுவது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்படவுள்ளதுடன் எதிர்வரும் முதலாம் திகதிமுதல் குறித்த சுற்றுநிருபம் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
வகைப்படுத்தப்படாத குப்பைகள் உள்ளூராட்சி சபைகளால் ஏற்றுகொள்ளப்படாத புதிய நடைமுறை தொடர்பில் தெளிவூட்டும் நிகழ்வு நேற்று(20) உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போது அவர் மேற்குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில், பெருந்தெருக்கள் அருகில் குப்பைகளை வீசுபவர்களுக்கு எதிராக, பொதுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தல் என்ற சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் பைசர் முஸ்தபா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை - அதிகரிக்கும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்க...
கடமைக்கு சமுகமளிக்காவிடின் விடுமுறையாக கருதப்படும் - ஆசிரியர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள விசேட செயல...
டெல்டா பரவுவதற்கு 15 நிமிடங்கள் போதும் - வெளியாட்களை வீட்டிற்குள் நுழைய அனுமதிக்காதீர் என ரிட்ஜ்வே க...
|
|