வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்த பிரதிநிதிகள் நியமனம்!

Thursday, March 2nd, 2023

இலங்கைக்கு வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான பிரதிநிதிகளை நியமிக்கும் திட்டத்தின் கீழ் ஐக்கிய இராச்சிய பிரதிநிதியாக கண்ணையா கஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கினார்.

இந்த நியமனம் நேற்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்த நியமனத்தின்படி, எரிசக்தி, விவசாயம், நகர்ப்புற அபிவிருத்தி, கனிம வளங்கள் ஆகியவற்றுக்;காக ஐக்கிய இராச்சியத்திலிருந்து முதலீட்டாளர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பை அவர் வகிப்பார்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கண்ணையா கஜன், தற்போது பிரித்தானியாவில் வசித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: