வெளிநாட்டில் 222 இலங்கையர்கள் உயிரிழப்பு – பலர் தற்கொலை!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 222 இலங்கை பணியாளர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 52 பெண்கள் உள்ளடங்குவதாகவும் 145 பேர் இயற்கை காரணங்களினால் உயிரிழந்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.
மேலும் வீதி விபத்துக்களில் 21 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். 25 ஆண்களும் ஆறு பெண்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி கட்டார் மற்றும் குவைட் ஆகிய நாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கை பணியாளர்களே அதிகமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்காக ஏழு மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
வலி வடக்கில் 11 கிராமங்கள் விடுவிக்கப்படாது!
அனர்த்த நிவாரணமாக வழங்கப்படும் ஐயாயிரம் ரூபாய் நிதியுதவி குறித்து பல முறைப்பாடுகள் - உன்னிப்பாக அவதா...
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தீவிரம் - தமிழகத்தில் 4 முனை போட்டி நிலவுவதாக தகவல...
|
|