வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம் வலுக்கட்டாயமாக ரூபாவாக மாற்றப்படுவதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது – பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

Tuesday, November 16th, 2021

பிணையமாக்கப்பட்ட நிதியிடல் ஒழுங்கேற்பாட்டின் கீழ் தொழிலாளர்களால் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம் வலுக்கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்றப்படுவதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம் வலுக்கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்றப்படுவதாக வெளியான தகவல் குறித்த செய்திகள் தொடர்பிலேயே இலங்கை மத்திய வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையிலேயே பிணையமாக்கப்பட்ட நிதியிடல் ஒழுங்கேற்பாட்டின் கீழ் தொழிலாளர்களால் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம் வலுக்கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்றப்படுவதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என அறிவித்துள்ளது.

மேலும் – மத்திய வங்கிக்கு ஏற்கனவே கிடைக்கின்ற இப்பாய்ச்சலினை பிணையமாக்குகின்ற சாத்தியப்பாட்டினை கண்டறிவதற்காக தற்போது முன்மொழிவுக்கான கோரிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

பிணையமாக்கப்பட்ட நிதியிடல் ஒழுங்கேற்பாடானது ஏதேனும் தொழிலாளர் பணவனுப்பல்கள் மீது தாக்கம் எதனையும் கொண்டிராது.

அத்துடன் கடந்தகாலங்களைப் போன்று பணவனுப்பல்களை இலங்கையில் உள்ள வெளிநாட்டு நாணயக் கணக்குகளில் தடையின்றி தொடர்ந்தும் வைத்திருக்கலாம் அல்லது இலங்கை ரூபாவாக மாற்றலாம்.

எனவே, பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். மேலும் உண்மையற்ற தகவல்களால் தவறாக வழிநடத்தப்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: