வெளிநாட்டவர் எவருக்கும் காணி விற்பனை செய்யப்படவில்லை – அமைச்சர் கயந்த கருணாதிலக்க!

Tuesday, August 15th, 2017

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு வெளிநாட்டவருக்கும் நாட்டிலுள்ள காணிகள் விற்பனை செய்யப்படவில்லை என அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டவர்களுக்கு தேவையான காணிகள் குத்தகைக்கு மாத்திரமே வழங்கப்படுகின்றன என்று இன்று கொழும்பில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டார் .

 கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் பொதுத் தேர்தலின் போதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இந்நாட்டில் காணி உரிமை இல்லாதிருக்கும் மக்களுக்கு காணி உரிமை பத்திரங்களை பெற்றுக்கொடுப்பதாக உறுதி வழங்கியிருந்தனர். அந்த உறுதிமொழியை யதார்த்தமாக்குவதற்கான அடித்தளத்தை அரசாங்கம் அமைத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts: