வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு அனுப்பும் பணத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு!

Saturday, October 7th, 2023

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு அனுப்பும் பணத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கடந்த செப்டெம்பர் மாதம் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பப்பட்ட பணம் 482.4 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தொகையானது கடந்த வருடம் 359.3 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டுள்ளது.

இருப்பினும், தொடர்ந்து மூன்றாவது மாதமாக உத்தியோகபூர்வ பணப்பரிமாற்றம் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த ஜூலை மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக 541 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒகஸ்ட் மாதம் 499.2 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இருப்பினும், கடந்த செப்டெம்பர் மாத நாணயக் கொள்கையின் அடிப்படையில் இலங்கையின் உத்தியோகபூர்வ பணப்பரிமாற்றம் 34 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:

ஐக்கிய தேசியக் கட்சியினாலேயே யாழ்.நூலகம் எரிக்கப்பட்டது: ஆவண நிழல் படத்தில் பொறிக்க வேண்டும் என்ற ...
இலங்கையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 இற்கும் அதிகமான ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் பலி – பொதுக் கல்வ...
குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்காக உதவி திட்டம் - மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ...