வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட சிறுநீரகங்களை கொண்டு மாற்று அறுவை சிகிச்சை – சுகாதார அமைச்சர் !

Tuesday, February 27th, 2018

வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட சிறுநீரகங்களை கொண்டு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதை சுகாதார அமைச்சு நிறுத்தியுள்ளது.சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை, தனியார் மருத்துவமனைகளில் உடற் பாகங்களை தானம் செய்தல் மற்றும் உடற்பாகங்களுக்கு நிதி வழங்க முன்வருகின்றவர்களிடமிருந்தும் எந்த அறவீடுகளையும் செய்ய வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் இந்தியர்கள் இலங்கையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளுக்காக சிறு நீரகங்களை விற்பனை செய்தமை தொடர்பான சர்ச்சைக்குரிய சூழலின் அடிப்படையில் அமைச்சினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, உடல் பாகங்களை தானம் செய்கின்றவர்களுக்கு அரச மருத்துவமனைகளில் விசேட மருத்துவ சலுகைகளை பெற்றுக்கொடுக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

Related posts: