வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்கள் மூலம் வருமானம் – 2021ஆம் ஆண்டு மட்டும் 3,221 மில்லியன் கிட்டியது!

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மூலம் 2021ஆம் ஆண்டுக்குள் 3,221மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் கோவிட்-19தொற்றுநோய் பரவியதில் இருந்து அதன் செலவினங்களைக் குறைக்க வெளிவிவகார அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது,
இலங்கை இராஜதந்திர பணிகளுக்கான கொடுப்பனவுகளை கடுமையாகக் குறைத்தல் மற்றும் இடைநிறுத்துதல் உட்பட்ட நடவடிக்கை மூலம், 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டில் இருந்து 1,314 மில்லியன் ரூபாவை வெளிவிவகார அமைச்சு சேமிக்க முடிந்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது. மூலதனச் செலவுகளைச் செய்யாதது, வெளிநாட்டுத் தூதரகங்களில் பணியாற்றும் 40அதிகாரி களை மாற்றமின்றி இலங்கைக்கு இடமாற்றம் செய்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட பணியகங்களைத் தற்காலிகமாக மூடுவதற்கான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் போன்ற செலவினங்களைக் குறைக்க மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2022ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், சி. $10.2மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் 2021 ஆம் ஆண்டில் 3,221 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதுடன், வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு ரூ. 675 மில்லியன் என அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|