புதிய தேர்தல் திருத்தச் சட்டம்: போட்டியிடாமலேயே பெண்கள் வெல்ல வாய்ப்பு – தேர்தல் மேலதிக ஆணையாளர் தெரிவிப்பு!
Friday, March 10th, 2017
புதிய தேர்தல் திருத்தச்சட்டத்தின்படி, தேர்தலில் பெண்கள் போட்டியிடாமலேயே வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது என இலங்கை தேர்தல் திணைக்கள மேலதிக ஆணையாளர் ஜனாப் டிம்.டிம்.முஹமட் தெரிவித்துள்ளார்..
பொது நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது –
16,1ஆம் இலக்க புதிய உள்ளுர் அதிகார சபைத் தேர்தல் திருத்தச் சட்டத்தின்படி ஒவ்வொரு கட்சியும் தமது வேட்பாளர் பட்டியலில் கட்டாயம் 25வீதம் பெண்களை பட்டியலிட வேண்டும். இதன்படி சில தருணங்களில் பெண்கள் போட்டியிடாமலேயே வெற்றி பெறக் கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. இனிவரங்காலங்களில் தேர்தலில் பெண்களின் முக்கியத்துவம் பங்களிப்பு என்பவற்றை பெரிதும் எதிர்பார்கக்கூடியதாக இருக்கும் என்றார்
Related posts:
தீவிரவாத தாக்குதலின் உளவுத்துறை தகவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் - பாதுகாப்பு அமைச்சு அறி...
ஏப்ரல் 21 தாக்குதல் - 24 சந்தேக நபர்களுக்கு எதிராக 23 ஆயிரத்து 270 குற்றச்சாட்டுகள்!
எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும் எங்களுக்குத் தேவையில்லை - யாழ். பல்கலைச் சமூகம் போராட்டம்!
|
|
|


