வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் அனுப்பிய அந்நிய செலாவணி ஜனவரியில் அதிகரிப்பு!

Monday, February 22nd, 2021

கடந்த ஜனவரி மாதம் வெளிநாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் அனுப்பிய அந்நிய செலாவணி அளவு 16.3 சதவீதத்தினால் அதிகரித்து 675 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாணய மாற்றுவீதத்தின் படி, இந்த தொகை 22.1 சதவீத வளர்ச்சியாக கருதப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் வசிக்கின்ற இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் குறைந்து விட்டாலும் கடந்த ஆண்டில் மாத்திரம் அவர்கள் 7.1 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக தொகை அனுப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

2019 ஆம் ஆண்டு வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் 6.7 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியை அனுப்பிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


தேசிய அளவிலான வீடமைப்புத் திட்டத்தை ஒரே நேரத்தில் ஆரம்பிக்குமாறு நிர்மாணத்துறையினருக்கு ஜனாதிபதி பணி...
தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளம் தொடர்பில் நாடாளுமன்றில் சட்டமூலம் - - தொழில் அமைச்சர் நிமல...
கடந்த 10 நாட்களில் 500 இற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பலி - அரசாங்கத் தகவல் திணைக்கள தகவல்கள் ...