வெங்காயம் மற்றும் உருழைக்கிழங்கு மனியத்தில் முறைகேடு – ஈ.பி.டி.பி. வலி கிழக்கு நிர்வாக பொறுப்பாளரின் கோரிக்கைக்கு விசாரணை செய்து அறிக்கை தருமாறு விசாய அமைச்சர் ஆளுநருக்கு பணிப்பு!

Thursday, March 18th, 2021

வெங்காயம் மற்றும் உருழைக்கிழங்கு மானியம் வழங்கப்படும்போது பாரபட்சம் காட்டப்பட்டமை தொடர்பில் அவதானம் செலுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் கோப்பாய் பிரதேச நிர்வாக பொறுப்பாளர் ஐங்கரன் இராமநாதன் வலியுறுத்தியுள்ளார்.

கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார அபிவிருத்திக் குழு கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியிருந்தார்.

மேலும் –

ஐங்கரன் இராமநாதனின் குறித்த விடயம் தொடர்பான கோரிக்கையை ஏற்றுக்கொண்ட விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர அது தொடர்பில் விசாரண மேற்கொண்டு அறிக்கை தருமாறு ஆளுநருக்கு பணித்துள்ளார்.

அதேநேரம் அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட வாழை பயிர்ச் செய்கை தொழிலாளர்களுக்கு இழைப்பீட்டை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் கோரியிருந்த ஐங்கரன் இராமநான் நெல் செய்கையாளர்களின் பாதிப்புகளுக்கும் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: