வீதி ஒழுங்கு சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு எதிராக இன்றுமுதல் சட்ட நடவடிக்கை – பொலிஸ் போக்குவரத்து தலைமையகத்தின் பணிப்பாளர் அறிவிப்பு!

Monday, September 28th, 2020

இன்றுமுதல் வீதி ஒழுங்கு சட்டத்தை மீறுகின்ற சாரதி களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்து தலைமையகத்தின் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொழும்பு நகரில் வீதிகளில் சமிக்ஞை முறையைப் புதுப்பிப்பதன் மூலம் போக்குவரத்து நெரி சலுக்குத் தீர்வுகாண சிறப்பு திட்டம் இன்று ஆரம்பிக் கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வீதி ஒழுங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகின்ற பகுதிகளிலுள்ள வீதி சமிக்ஞை மின் விளக்குகளை இன்றையதினம் ஆராயப்படவுள்ளதாக பொலிஸ் போக்கு வரத்து தலைமையகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

குறித்த வீதி சமிக்ஞை மின் விளக்குகளின் தரவுகள் பெறப்பட்டு அதிக வாகனங்கள் பயணிக்கு வீதிகளுக்கு அதிக காலமும் குறைந்தளவு வாகனங்கள் பயணிக்கும் வீதிகளுக்குக் குறைந்த காலமும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கொழும்பையும், அதனை அண்மித்த நகரங்களிலும், பிரதான 4 வீதிகளை மையமாகக் கொண்டு, காலை 6 மணி காலை 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும், இந்த வீதி ஒழுங்கை சட்டம் கடந்த 14 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த வீதி ஒழுங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு முதல் இரண்டு வாரங்களுக்கு விதிமுறைகளை மீறுகின்ற சாரதிகளுக்கு எதிராக அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகள் என்பன மேற்கொள்ளப்படவில்லை.

எனினும் இன்றுமுதல் வீதி ஒழுங்கைள சட்டத்தை மீறு கின்ற சாரதிகளுக்கு எதிராக அபராதம் மற்றும் சட்ட நவடிக்கைகள் என்பன மேற்கொள்ளப்படுமென பொலிஸ் போக்குவரத்து தலைமையகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட தெரி வித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை சட்டத்தரணிகள் சங்கத்தின் சுயாதீனத்தன்மையில் தங்கியுள்ளது - நீதி அமைச்...
வவுனியாவில் கோர விபத்து - தந்தை - மகன் பலி - ஆத்திரமடைந்த மக்களால் பேருந்து தாக்கி சேதமாக்கப்பட்டத...
அவுஸ்திரேலியா - இலங்கை கிரிக்கெட் தொடர் அனுமதிச்சீட்டு வருமானத்தை மக்களுக்காக செலவிட தீர்மானம்!