வீதிக் கடமைக்குச் செல்லும் போக்குவரத்துப் பொலிஸார் 400 ரூபாய் பணத்தையே வைத்திருக்க முடியும் –  நடைமுறைக்கு வருகின்றது புதிய கட்டுப்பாடு!

Friday, June 29th, 2018

வீதிப் போக்குவரத்து கடமைக்குச் செல்லும் போக்குவரத்துப் பொலிஸார் 400 ரூபாய் பணத்தை மட்டுமே தமது பணப்பையில் எடுத்துச் செல்ல முடியும் என்ற கட்டுப்பாட்டை பொலிஸ் தலைமையகம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

இலஞ்சம் பெறுவதைத் தடுக்க இந்தக் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடமைக்குச் செல்வதற்கு செல்ல முன்னர் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கொஸ்தாபல் தமது பணப்பையை பொறுப்பதிகாரியிடம் காண்பித்துச் செல்ல வேண்டும்.

மேலும் பொலிஸ் நடமாடும் பிரிவினர் வீதிக் கடமையிலிருக்கும் போக்குவரத்துப் பொலிஸாரின் பணப்பையைச் சோதனையிடுவதற்கும் புதிய நடைமுறையில் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த நடைமுறை தொடர்பான சுற்றறிக்கை வடக்கு பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை வீதிப்போக்குவரத்துக் கடமைக்குச் செல்லும் போக்குவரத்துப் பொலிஸார் 300 ரூபாய் பணத்தை மட்டுமே தமது பணப்பையில் எடுத்துச் செல்ல முடியும் என்ற கட்டுப்பாடு ஏற்கனவே நடைமுறையிலுள்ளது. அதுதொடர்பில் அலுவலகப் பதிவேட்டில் கடமைக்குச் செல்லும் அலுவலகரே பதிந்துவிட்டுச் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts:

வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை புரிந்துணர்வின் மூலம் உயர்த்த முடியும் - ஜனாதிபதி !
போக்குவரத்து அமைச்சின் நிறுவனங்களில் ஊழல், மோசடி இடம்பெறுமாயின் பாரபட்சமற்ற நடவடிக்கை - அமைச்சர் பந்...
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வசந்தகால கூட்டங்களில் சீன உயர் அதிகாரிகள் கலந்துகொள்வார்க...