வீடுகள் கட்டுவதற்கு மணல் இன்றி மக்கள் அவதி !

Wednesday, April 18th, 2018

யாழ்ப்பாண மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையால் அமைக்கப்பட்தாக பயனாளிகள் கவலை வெளியிட்டள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பயனாளிகள் கூறுகையில் –

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக 5 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டினை அமைப்பதற்கு நாம் தெரிவுசெய்யப்பட்டோம். தற்போது சங்கானை, சண்டிலிப்பாய், கோப்பாய், ஊர்காவற்றுறை ஆகிய பிரதேசங்களில் வீடமைப்புக்கான அத்திபாரம் இடும் பணிகள் ஆரம்பிக்கபட்டுள்ளன.

ஆனால் இன்னமும் எமக்கு மண் கிடைக்கவில்லை. அத்திபாரம் கட்டுவதற்கான மண்ணை வெளியில் அதிக விலைக்கு கொள்வனவு செய்து கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். ஒரு பார ஊர்தி மண் 36 ஆயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்கின்றோம். ஆனால் அதிகார சபையின் மூலம் 22 ஆயிரத்து 600 ரூபாவுக்கு கொள்வனவு செய்து வழங்க முடியும். அத்திபாரம்  கட்டலுடன் மேலதிக கட்டுமானங்களை மேற்கொள்ள முடியாமல் அவதிப்படுகிறோம். இந்த கட்டுமானங்களுக்கு நாகர் கோயில் மண் பெற்றுக் கொடுப்பது வழமை.

ஆனால் இன்னமும் அதற்கான நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் எடுக்கவில்லை. அதிக விலை கொடுத்து மண்ணை வெளியில் எம்மால் வாங்க முடியாது. வீடுகட்டி முடிப்பதற்கான மண்ணையும் அதிகளவில் பெற்றுக்கொள்ள முடியாது. ஆகவே மண்ணைப் பெற்றுக்கொடுப்பதற்கு உரிய அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றனர்.

இது தொடர்பில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் யாழ்ப்பாண மாவட்ட பணிப்பாளர் எம்.ரவீந்திரனை கூறுகையில் – வீடுகட்டுவதற்கான மண் நாகர் கோயில் பகுதியில் இருந்து பெறப்படுவது வழமை. மாவட்டச் செயலரின் ஊடாக இதனைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் ஒரு வீடு தலா 5 லட்சம் பெறுமதியில் 640 வீடுகள் நடப்பு வருடத்தில் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன. மூளாய் 50, துணைவி 50, அராலி தெற்கு 114, அராலி கிழக்கு 105, அராலி மேற்கு 70, ஈவினை 32, வரணி 10, மந்துவில் 20, மெலிஞ்சிமுனை 30, நாரந்தனை 10, சின்னமடு 25, தோப்பு 10, பொக்கணை 36, அச்சுவேலி 25, சண்டிலிப்பாய் 10, கட்டுடை 10, காக்கை தீவு 30 உட்பட 640 வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

Related posts:

முகக்கவசம் அணிய வேண்டிய மட்டத்திலேயே இலங்கை இன்னும் உள்ளது - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்!
பிரதான நகரங்களில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுங்கள் – சாரதிகளுக்கு காவல்துற...
இலங்கையின் முன்னேற்றத்திற்கு டிஜிட்டல் தொழிநுட்பத்தை பயன்படுத்த வேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்...