விஹாரமாதேவி பூங்காவை மீண்டும் கொழும்பு மாநகர சபைக்கு வழங்குங்கள் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு பணிப்பு!

Sunday, November 5th, 2023

விஹாரமாதேவி பூங்காவை மீண்டும் கொழும்பு மாநகர சபைக்கு வழங்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையால் கையகப்படுத்தப்பட்ட ஏனைய சொத்துக்களை உரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


முன்பள்ளிகள் எந்தத் திணைக்களத்தின் கீழ் இயங்குகிறது என்பதைக் கூட உறுதிப்படுத்த தகுதியற்ற அவல நிலையே ...
இரண்டாம் கட்ட கொரோனா பரவும் அபாயம் - மக்களுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ள தொற்று நோய் தடுப்பு பிரிவின் வ...
வெளியுறவுக் கொள்கையில் சாதகமான மாற்றங்களை கொண்டுவருவதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன - ஜனாதிப...