விஷேட வட்டிக்கான வைப்பு தொகை அதிகரிப்பு!

நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்படவுள்ள விஷேட வட்டிக்கான அதிகபட்ச நிலையான வைப்பு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
அந்தவகையில் நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்புக் கணக்குகளுக்கு வழங்கப்படவுள்ள 15 வீத விஷேட வட்டிக்கான அதிகபட்ச நிலையான வைப்புத் தொகை 10 இலட்சத்திலிருந்து 15 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2017 வரவு செலவு திட்டத்தில் முன் வைக்கப்பட்ட குறித்த யோசனை மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்குவரும் என்று நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அதன்படி வங்கிகளினால் வழங்கப்படுகின்ற வட்டி வீதத்திற்கு மேலதிக 15 வீதம் வரையான வட்டி தொகை அரச திறைசேரியினால் வங்கிகளுக்கு வழங்கப்படும். இதேவேளை, 60 வயதுக்கு மேற்பட்ட நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளுக்கு இந்த விஷேட வட்டி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை - ரஷ்யா இடையே 60 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு முத்திரைகள் கண்காட்சி!
அரச மருந்தாளர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு!
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,13,769 ஆக அதிகரிப்பு!
|
|