விவசாயிகளுக்கு இழப்பீடாக 1356 கோடி ரூபா!

பயிர்ச்செய்கைக்கு உரமானியம் , மற்றும் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்காக 1365 கோடி ரூபா இழப்பீடு செலுத்தப்பட்டள்ளதாக விவசாய அமைச்சு தெரிவிததுள்ளது.
15 இலட்ச விவசாயிகளுக்கு இந்த இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
2017ஆம் ஆண்டில் பெரும்போக உரமானியமாக 84இலட்சத்து 226 ரூபா செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக விவசாய மற்றும் விவசாய காப்புறுதி சபை மூலம் 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 520 கோடி ரூபா நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்திலும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் உரமானியம் மற்றும் உற்பத்திகளுக்கான இழப்பீட்டுதொகை தொடர்ந்தும் வழங்கப்படும் என்ற விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம்!
திறைசேரியின் செயலாளராக நியமனம் பெற்றார் எஸ்.ஆர் ஆட்டிகல !
அரச மற்றும் தனியார் துறையினருக்கு ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிவித்தல்!
|
|