விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தயார் – ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவிவிப்பு!

Friday, December 18th, 2020

விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக பொருளாதார மறுசீரமைப்பு, வறுமையொழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் இத்த நடவடிக்கை ஊடாக விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நியாயம் கிடைக்கச் செய்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வேலைத்திட்டத்துடன் கிராமத்திற்கு எனும் தொனிப்பொருளிலான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கண்டி மாவட்டத்திற்கான நடவடிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தை பொல்கொல்லயில் நடைபெற்றது.  இதன் போதே பசில் ராஜபக்ஷ இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்..

மேலும் கிராமிய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர் மேலும்  வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: