பொலிஸாருடன் வாக்குவாதத்திலீடுபட்டவர்களுக்கு தண்டணை!

Friday, March 17th, 2017

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் வீதியில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரை வழிமறித்த பொலிஸார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

இந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் நீதிமன்றத்திற்கு வந்த போது, மூவரும் குற்றம் புரிந்ததாக ஒப்புக் கொண்டனர்.

இதனையடுத்து, நீதிபதி வழங்கிய தீர்ப்பின்படி, ஒருவருக்கு 6 ஆயிரம் ரூபா தண்டம் விதித்ததுடன் மூவரையும் தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான இரு ஆட்பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கினார்.

இதேவேளை, மூவரும் ஒரு வருட காலத்தில் 120 மணித்தியாலங்கள் சமூகப் பணியில் ஈடுபடுத்த சமுதாயம் சார்ந்த சீர்திருத்தப் பிரிவில் ஒப்படைக்குமாறும் பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, தலைக்கவசம் அணியாமல் சென்ற இந்த இளைஞர்களை வழிமறித்த பொலிஸாருடன், இவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பொலிஸார் தம்மைக் கடமை செய்யவிடாமல் தடுத்தனர் என்ற குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்படத்தக்கது

Related posts: