விவசாயப் பண்ணை வலயங்கள் அமைக்க நடவடிக்கை – கைத்தொழில் அமைச்சர் தயா கமகே!
Wednesday, November 15th, 2017விவசாயம் மற்றும் பண்ணை விலங்கு, மீன்பதனிடும் வலயங்கள் ஆரம்பிப்பதற்கான ஆய்வு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டத்தை அனுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் அமைப்பதற்காக இந்த ஆய்வு நடவடிக்கைகள் இடம்பெற்றது. இந்த திட்டத்திற்கென பத்துக்கோடி ரூபாய் செலவிடப்படும். 500 ஏக்கர் நிலப்பரப்பில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தினால், 200க்கும் அதிகமான உற்பத்தியாளர்கள் பயனடையவுள்ளனர். இதன் மூலம் வருடாந்தம் ஆறு கோடியே 80 இலட்சம் டொலர் ஏற்றுமதி வருமானமாக எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தள்ளார்
Related posts:
வட்டுக்கோட்டையில் 19 வயது யுவதியைக் காணவில்லை என முறைப்பாடு!
கைதடி முதியோர் முதியவர்கள் முதற்தடவையாக ஆன்மிகச் சுற்றுலா!
சமூக சேவைகள் அலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு - கிளிநொச்சியில் வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கிவைப்பு...
|
|