விளையாட்டுத்துறையிலும் பின்தள்ளப்பட்ட வடக்கு மாகாணம்!

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று முடிந்த 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் நிகழ்வுகளின் தரவரிசையில் வடக்கு மாகாணம் இறுதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
113 தங்கப்பதக்கங்களை தனதாக்கிய மேல்மாகாணம் 42ஆவது தேசிய விளையாட்டு விழாவின் நாயகர்களாக மீண்டும் தெரிவானதுடன், தேசிய விளையாட்டு விழாவில் 100 பதக்கங்களை பெற்றுக்கொண்ட முதலாவது அணியாகவும் வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
இதேவேளை 33 பதக்கங்களை தனதாக்கிய மத்தியமாகாணம் 2ஆவது இடத்தையும், 28 பதக்கங்களை தனதாக்கிய தென்மாகாணம் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.
7 தங்கங்களை வென்ற கிழக்கு மாகாணம் 8ஆவது இடத்தையும், 2 பதக்கங்களை வெற்றி கொண்ட வடமாகாணத்தால் இறுதி இடத்தையுமே பெற முடிந்தது.
யுத்தத்தம் முடிவடைந்த பின்னரான காலத்தில் வடக்கு மாகாணம் கல்வித்துறையில் மிகமோசமான நிலைக்கு சென்றுள்ள நிலையில் தற்போது விளையாட்டு துறையிலும் தமது ஆழுமையை இழந்துள்ளமையானது எமது இளம் சமூகத்தினரிடையே இருந்த எதிர்பார்ப்பு முற்றிலும் சிதைவடைந்துள்ளதாக புத்திஜீவிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
Related posts:
|
|