விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு!

Monday, April 8th, 2024

சர்ச்சையை ஏற்படுத்திய இம்யூனோகுளோபிலின் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது

அதன்படி சந்தேகநபர்கள் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இதேவேளை முதலாம், இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு ஐந்தாவது சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக நீதிமன்ற அறிவித்துள்ளது

அத்துடன், 10 ஆம் மற்றும் 11 ஆம் சந்தேக நபர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி பிணை வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது .

000

Related posts: