விளக்கமறியலில் உள்ள 3 மாணவர்களுக்கு பரீட்சை எழுத வாய்ப்பு!

Wednesday, August 8th, 2018

வாள்வெட்டு குற்றச்சாட்டில் விளக்கமறியலில் உள்ள 03 பேர் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

தென்மராட்சிப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாள்வெட்டு சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

கடந்த 4ஆம் திகதி மானிப்பாய் காவற்துறையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சாவகச்சேரி, சரசாலை, மறவன்புலோ பிரதேசங்களினை சேர்ந்த 10 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 3 பேர் இந்த வருடம் உயர்தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த மாணவர்களை யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் உயர்தரப் பரீட்சை எழுதுவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

Related posts: