விரைவில் பல்கலைக்கழகமாக மாறும் வவுனியா வளாகம்!

Friday, August 18th, 2017

யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமானது மிக விரைவில் பல்கலைக்கழகமாக மாற்றப்படும் என உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

வவுனியா வளாகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவு விழா முதல்வர் த.மங்களேஸ்வரன் தலைமையில் பம்பைமடுவில் உள்ள வளாகத்தில் இடம்பெற்றது.குறித்த, நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,

நீண்ட காலமாக வளாகமாக செயற்படும் வவுனியா வளாகமானது பல்துறையில் வளர்ச்சியடைந்துள்ளது.தமிழ், சிங்கள மாணவர்கள் கல்வி கற்கும் இவ் வளாகமானது மிக விரைவில் பல்கலைக்கழகமாக மாற்றமடையும் எனவும் கூறியுள்ளார்.

வட மாகாணத்தில் இரண்டாவது பல்கலைக்கழகமாக இந்த பல்கலைக்கழகம் காணப்படும். அத்துடன் இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து விட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜே.ஆர் உருவாக்கிய அரசியல் அமைப்பினை தமிழர் தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. அதனையடுத்து வந்த அரசியல் அமைப்புகளையும் தமிழர் தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை.எனினும், தற்போது உருவாக்கப்படும் அரசியல் அமைப்புக்கு பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சியினரும் பங்களிப்பதாகவும் உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

Related posts: