விரைவில் பயணிகள் போக்குவரத்து பேருந்துசாரதிகளுக்கு புதிய சாரதி அனுமதிப் பத்திரம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம துரித நடவடிக்கை!

நாட்டில் அதிகரிக்கும் பஸ் விபத்துக்களை கருத்திற் கொண்டு, புதிய பயணிகள் போக்குவரத்து பேருந்து சாரதி அனுமதிப் பத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் கனரக வாகன அனுமதிப் பத்திரத்தை மாத்திரம் பயன்படுத்தி, எதிர்வரும் காலங்களில் பயணிகள் பேருந்தை செலுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனடிப்படையில் பயணிகள் போக்குவரத்து சாரதி அனுமதிப் பத்திரம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
இதற்கமைய , பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்து சாரதிகளுக்கு விசேட பயிற்சிகளை வழங்கி, அதனூடாக புதிய சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ,இலங்கை போக்குவரத்து சபை மற்றும் பாதுகாப்பு பிரிவினர் இணைந்து இந்த திட்டத்தை தயாரித்து வருவதாகவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|