விரைவில் எரிபொருளின் விலைகளில் திருத்தம் – மக்களுக்கு நிவாரணம் வழங்க மின்சாரம் கட்டணமும் குறைக்கப்படும் என எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!!
Monday, March 13th, 2023எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள விலை திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்ப்பார்த்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் எரிபொருள் இறக்குமதியில் கிடைக்கும் நிவாரணத்தை மக்களுக்கு வழங்க எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விலை சூத்திரத்தின்படி, ஒவ்வொரு மாதமும் முதல் நாள் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படுகிறது.
இதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள விலைத் திருத்தத்தில் எரிபொருள் விலையை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தனிநபருக்கு சட்டத்தை கையிலெடுக்கும் உரிமை கிடையாது!
பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்றில் தீ விபத்து!
இலங்கைக்கான வெங்காயம் மீதான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை நீக்கியது இந்தியா!
|
|