முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வழங்கத் தவறியமைக்கு தொற்று நோயியல் பிரிவே காரணம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு!

Friday, February 19th, 2021

கொரோனா வைரஸ் தொடர்பான அரசாங்கத்திற்கு தெளிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வழங்கத் தவறியதற்கு தொற்று நோயியல் பிரிவே காரணம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அச்சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே மேற்கண்டவாறு கூறியுள்ளார்..

அத்துடன் இலங்கையில் பிரித்தானியா மற்றும் தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட புதிய மாறுபாடு கண்டறியப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்திற்கான தடுப்பூசி திட்டத்தை வெளியிடுமாறு தொற்றுநோயியல் பிரிவிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

கொரோனா வைரஸை ஒரு அரசியல் பிரச்சினையாக மாற்ற அரசாங்கமும் எதிர்க்கட்சியும் முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய வைத்தியர் ஹரித அலுத்கே, இதன் காரணமாக சுகாதார நிபுணர்களின் செயற்பாடுகள் தடைப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தொடரும் கனமழையால் வெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு மாகாணம் - இன்றும் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவ...
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை அலட்சியம் செய்தால் கைதுசெய்யப்படுவர் - சிரேஷ்ட பிரதிக் பொலிஸ் மா ...
அனைத்து மக்களினதும் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வரவு செலவுத்திட்டம் அமையும் - இராஜாங்க அமைச்சர்...