2018 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ரயில்களில் மோதுண்டு 99 பேர் பலி!
Friday, March 9th, 2018
இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் ரயில் விபத்துக்களில் 99 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அனுரபிரேமரட்ன தெரிவித்துள்ளார்.
இந்த மரணங்கள் புகையிரத கடவைகளில் கவனயீனமாக வாகனங்களை செலுத்துதல், புகையிரத மிதி பலகையில் பயணித்தல், செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டு ரயில்பாதையில் நடத்தல், தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொள்ளல், ஓடும் ரயிலில் ஏறுவதற்கு முயற்சித்து கீழே விழுதல் போன்ற காரணிகளினால்சம்பவித்துள்ளன.
2017ஆம் ஆண்டில் நாடு முழுவதிலும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 517 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.
Related posts:
ஜனவரிமுதல் தூர இடங்களுக்கான பேருந்து சேவைகள் வழமைக்கு திரும்பும்!
நாடாளுமன்றுக்கு அதிக பாதுகாப்பு அவசியம் - சபாநாயகர் மஹிந்த யாப்பா வலியுறுத்து!
தன்னிச்சையாக சம்பளம் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் அரச நிறுவனங்கள் தொடர்பில் புதிய சட்டமூலம் - நாடா...
|
|
|


