விமல், வாசு, கம்மன்பில ஆகியோரை பதவி நீக்கம் செய்யும் எண்ணமில்லை – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு தொடர்பில் அபத்தமான கருத்தைக் கொண்டுள்ளமையினால் விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகிய மூன்று அமைச்சரவை அமைச்சர்களை, பதவிகளில் இருந்து நீக்குவதில் தனக்கு எவ்வித அவசியமும் இல்லையென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
கூட்டுப் பொறுப்பில் எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் இருப்பின் அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு பதிலாக அதிலிருந்து விலகி கருத்துக்களை முன்வைத்திருப்பதே சிறந்ததென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை பிரேமதாஸவின் ஆட்சிகாலத்தில் கூட்டுப் பொறுப்பை மீறியமை தொடர்பில் லலித் அத்துலத்முதலி மற்றும் ஜி.எம். பிரேமசந்திர ஆகிய அமைச்சர்களுக்கு எதிரான வழக்கில் நீதிபதி மார்க் பெர்னாண்டோ வழங்கிய தீர்ப்பையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.
அத்துடன் ஜனாதிபதியின் செயலாளர் பிபி ஜெயசுந்தரவை சில அமைச்சர்கள் விமர்சித்தமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி அது தவறான விடயம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|