விபத்துக்களை குறைக்க வருகின்றது நான்கு சக்கரங்களைக் கொண்ட புதிய வாகனம் !

Friday, November 11th, 2016

முச்சக்கரவண்டிகளால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்காக நான்கு சக்கரங்களைக் கொண்ட புதிய வகை வாகனங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் வரவு செலவு திட்ட உரையில் தெரிவித்துள்ளார்.

இதற்காக 1000 வாகனங்களை இறக்குமதி செய்வோருக்கு 50 சதவீத வரி நிவாரணம் வழங்கப்படும். பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வேன்களை 32 ஆசனங்களை கொண்ட வாகனங்களாக மாற்றிக்கொள்வதற்கு ஊக்குவிக்கும் முகமாக வரி நிவாரணம் வழங்கப்படும் என நிதியமைச்சர் குறிப்பிட்டார்.  பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் சுத்திகரிப்பாளர்களுக்காக ஓய்வூதியம் வழங்குவதற்கும், இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் ஒன்றிணைந்த கால அட்டவணைக்கு அமைய செயற்படுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

779067927b3

Related posts: