வித்தியா படுகொலை வழக்கு விசாரணையில் மாற்றம்!

Tuesday, May 2nd, 2017

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா தொடர்பான வழக்கு “ட்ரயல் அட்பார்” (நீதிபதிகள் அடங்கிய விசாரணை மன்று) முறையில் விசாரணைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

வித்தியாவை கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி படுகொலை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராகவே குறித்த ட்ரயல் அட்பார் முறையிலான விசாரணை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வித்தியா படுகொலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 12 சந்தேகநபர்களில் 10ஆம் மற்றும் 12ஆம் சந்தேகநபர்கள் அண்மையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். மேலும், நீதிவான் நீதிமன்ற விசாரணைகள் ஏறத்தாள முடிவடைந்துள்ள நிலையில் யாழ்.மேல் நீதிமன்றில் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகையை தககல் செய்யப்படவுள்ளது.இதன்போதே ட்ரயல் அட்பார் விசாரணையை ஆரம்பிக்க சட்டமா அதிபர் திணைக்களம் தயாராகி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts: