வித்தியா கொலை: குற்றவாளிகள் ஓரிடத்தில் இல்லை – துஷார உப்புல்தெனிய!

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு கைதிகளும் தும்பறை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இவ்வாறு அழைத்து வரப்பட்டிருந்த ஏழு பேர் மீதும் சிறைச்சாலையிலுள்ள கைதிகள் சிலர் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த விடயம் குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல்தெனிய கூறுகையில் இவ்வாறு வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது அவ்வாறு சிறைக் கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு தாம் இடமளிக்க போவதில்லை எனவும் அவர் கூறினார்.
தும்பறை சிறைச்சாலையிலுள்ள குறித்த ஏழு கைதிகளும் வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.
Related posts:
இவ்வாண்டு 27603 பேருக்கு பல்கலைக்கழக வாய்ப்பு!
தென் கொரியாவுக்கு ஜனாதிபதி விஜயம்!
டெல்டா தொற்றாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தால் 4 ஆவது அலை ஆரம்பமாகும் – பிரதி சுகாதார சேவைகள...
|
|