விடுமுறையை வீட்டிலேயே களியுங்கள் – இராணுவத் தளபதி அறிவுறுத்து!

Thursday, May 13th, 2021

இன்று இரவு 11 மணிமுதல் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், அனைவரும் வீட்டிற்குச் சென்று நீண்ட வார இறுதி விடுமுறையை வீட்டிலேயே களிக்க வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா வலியுறுத்தியுள்ளார்.

நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், அனைவரும் நீண்ட வார இறுதி விடுமுறையை வீட்டிலேயே களித்து அதிகபட்ச ஆதரவை வழங்குவார்கள் என்று நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த கட்டுப்பாடுகள் அத்தியாவசிய சேவைகளுக்கும், நாட்டின் இயல்பான செயல்பாட்டுடன் தொடர்புடைய தடுப்பூசி திட்டத்திற்கும் பொருந்தாது என்றும் அவர் குறிப்பட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் மே 31 வரை விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து விளக்கமளிக்கும் போதே இராணுவ தளபதி இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: