விஞ்ஞான பிரிவை தவிர்ந்த ஏனைய பிரிவுகளில் சித்தியடைந்த மாணவர்களும் தாதியர் சேவைக்கு!

Tuesday, January 2nd, 2018

கல்வி பொதுத்தராதர உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவை தவிர்ந்த ஏனைய பிரிவுகளில் சித்தியடைந்த மாணவர்களையும் தாதியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மாணவர்களை தாதியர் சேவைக்கும் இணைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தாதியருக்கான வெற்றிடம் நிலவுவதால், வைத்தியசாலைகளில் சிரமங்கள் ஏற்படுவதையும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் கொழும்பு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளிலும் தாதியர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாகவும் அமைச்சு கூறியுள்ளது.

Related posts: