வாள்வெட்டக்கு இலக்காகி குடும்பப் பெண் படுகாயம் – மீசாலை வடக்கில் சம்பவம்!

Sunday, September 13th, 2020

வீட்டினுள் புகுந்த இனந்தெரியாத குழுவினர் வீட்டை சேதப்படுத்தியதோடு, மேற்கொண்ட வாள் வெட்டில் குடும்பப் பெண் படுகாயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு 9.00 மணியளவில் யாழ்.தென்மராட்சி மீசாலை வடக்கு – வவா கடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வாள் வெட்டில் படுகாயமடைந்த 40 வயது குடும்பப் பெண்ணான ஸ்ரீதரன் பவானி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: