வாட்டி வதைக்கும் வரட்சி – நெடுந்தீவு மக்கள் பாதிப்பு!

Thursday, June 21st, 2018

நெடுந்தீவு மண்ணுக்கே உரித்தான குதிரை இனங்களும் கால்நடைகளும் அருகிச் செல்லும் நிலை காணப்படுவதாகவும் பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

யாழ் நெடுந்தீவில் போதிய வசதிகள் இன்மை, தொழில் வாய்ப்பின்மை, வரட்சி என்பனவற்றால் இங்கு பூர்விகமாக வாழ்ந்த மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருவதுடன் தொன்மையான குதிரை இனங்களும் அருகி வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நெடுந்தீவு மேற்கு சாறாப்பிட்டி வீட்டுத்திட்டம், நெடுந்தீவு கிழக்கு 12 ஆம் வட்டாரம், 13 ஆம் வட்டாரம் போன்ற பகுதிகளில் வாழ்ந்த மக்கள் அண்மைக்காலமாக அதிகளவில் வெளியேறியுள்ளனர் என்றும் அதாவது மருத்துவ வசதி உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் இன்மை, தொழில் வாய்ப்புக்கள் இன்மை காரணமாக அதிகளவான மக்கள் இங்கிருந்து வசதி வாய்ப்புக்களைத் தேடி வெளியேறி வருவதாகவும் இவ்வாறு ஒரு பகுதியினர் வசதி வாய்ப்புகளைத் தேடி வெளியேறிவரும் நிலையில் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் குறித்த பகுதிகளில் தொழில் வாய்ப்புக்கள், வருமானங்கள் இன்றி தாம் பெரும் கஷ் டங்களை அனுபவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related posts: