வாக்காளர் இடாப்பு தொடர்பான மேன்முறையீட்டு கால நிறைவு!

Wednesday, September 6th, 2017

 

2017 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தத்திற்கு வழங்கப்பட்ட மேன்முறையீட்டு கால அவகாசம் நாளையுடன் நிறைவுபெறுகின்றது.

வாக்காளர் இடாப்பில் இதுவரை பெயர் பதியப்படாதவர்கள், தங்களின் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்திற்கு சென்று மேன்முறையீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தினூடாகவும் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கமுடியும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம் எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

Related posts: