வாக்காளர் இடாப்பில் இணைந்து கொள்ளாதவர்களுக்கு விசேட பிரச்சாரம்!

Friday, August 5th, 2016
நாட்டில் தகுதி இருந்தும் வாக்காளர்களாக பதிவு செய்யாமல் இருக்கும் இளைஞர்களுக்கு, விசேட சமூக ஊடக பிரச்சார திட்டம் ஒன்று முன்னெடுத்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரையில் நடைமுறைப்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார். இதன்மூலம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் தொடர்பில் தெளிவுப்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரதான நோக்கமாக ஆக்கப்பூர்வமான வழிகளில் அனைவருக்குமான விழிப்புணர்வை முன்னணி இளைஞர் அமைப்புகள், சமுதாயங்கள் என்பவற்றிற்கு ஏற்படுத்த வேண்டும் என்பதே என மகிந்த தேசப்ரிய கூறியுள்ளார். அத்துடன் வாக்காளர்களாக பதிவு செய்யாமல் 3 இலட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாக்காளர்களாக பதிவு செய்யாமல் இருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஏழு நாள் வேலைதிட்டத்தை தேர்தல்கள் அமைப்புகள் மற்றும் இலங்கை இளைஞர் கூட்டமைப்புகள் இணைந்து நடாத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: