வாக்காளர்களின் சுகாதாரப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது – மஹிந்த தேஷபிரிய!

Sunday, August 2nd, 2020

வாக்களிப்பு நிலையங்களுக்கு வரும் சகல வாக்காளர்களதும் சுகாதாரப் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரிய தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக வாக்களிப்பு நிலையங்களைக் கொண்டு ஒத்திகைகள் நடத்தப்பட்டன. இதன் மூலம் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டதாகம் அவர் சுட்டிக்காட்டினார்.

இவற்றைக் கருத்திக்கொண்டு அச்சமும் சந்தேகமும் இன்றி வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு வாக்காளர்களைக் தாம் கோருவதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரிய தெரிவித்தார்.

வாக்களிப்பு நிலையங்களுக்கு வரும் சகல வாக்காளர்களும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கைகளைக் கழுவிவிட்டு வருவதும் கட்டாயமானது. வாகளிப்பு நிலையத்தில் முதலாவது உத்தியோகத்தரிடம் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தைக் சமர்ப்பித்த பின்னரும் வாக்காளர்கள் கைகளை கழுவ நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

அத்துடன் ஒவ்வொரு வாக்காளருக்கும் தொற்று நீக்கப்பட்ட பேனா அல்லது பென்சில் வழங்கப்படும். வாக்கைச் செலுத்திவிட்டு வெளியேறும்போது கைகழுவுவது அவசியமாகும். இந்த ஏற்பாடுகள் காரணமாக வாக்காளர்களுக்கு கிருமி தொற்றக்கூடிய சாத்தியம் இல்லையென்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: