வாகன உரிமையாளர்களுக்கான அறிவிப்பு!

Tuesday, May 15th, 2018

2017 டிசம்பர் 31ஆம் திகதிவரை 5 வருடங்களாக வாகன வருமான வரி அனுமதிப் பத்திரம் பெறப்படாத வாகனங்கள் பயன்பாட்டில் இல்லாத வாகனங்கள் எனக் கருதி அவை அனைத்தினதும் பதிவுகள் நீக்கப்படும் என வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் அறிவித்துள்ளார்.

“தங்கள் வாகனத்துக்கு கடந்த 5 ஆண்டுகளாக வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் பெறவில்லையாயின் உடனடியாக அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் நிலுவையைச் செலுத்தி வரிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

வாகனம் பழுதடைந்த நிலையில் இருக்குமாயின் பிரதேச செயலகத்தில் நிலுவைக் கொடுப்பனைவைச் செலுத்தி பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்” என்றும் மாகாண ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை வாகன உரிமையாளர்கள் மேற்குறிப்பிட்ட எந்த நடவடிக்கையையும் செய்யாதிருப்பின், அந்த வகை வாகனங்களின் பதிவுகள் எதுவித முன்னறிவித்தலுமின்றி மோட்டார் வாகனப் பதிவாளரால் இரத்துச்செய்யப்படும் எனவும் வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: