வாகன இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டியது அவசியமில்லை – நிதி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Sunday, November 14th, 2021

வாகன இறக்குமதிக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படாது என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போதே நிதி அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முன்பதாக கடந்த மார்ச் மாதம் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் வாகன இறக்குமதியை மட்டுப்படுத்த நேரிட்டது. இந்நிலையில்  எதிர்வரும் 6 முதல் 7 மாதங்களுக்கு வாகன இறக்குமதி சந்தை திறக்கப்படாது எனவும் நிதி அமைச்சின் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை வாகன இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என தான் நினைக்கவில்லை எனவும் நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வாகனங்கள் தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்பதனால் மீண்டும் வாகனங்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக வாகன இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்திருந்தது.

வாகன வரி அல்லது இறக்குமதி தொடர்பில் இம்முறை வரவு செலவுத் திட்டம் மூலம் எவ்வித தளர்வுகளும் இல்லாமையினால் இந்த நிலைமை ஏற்படும் எனவும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் தெரிவித்திருந்தார்.

இதேவேளை சந்தையில் உள்ள வாகனங்களும் விற்பனை செய்ய முடியாத நிலைமை ஏற்படும் நிலை காணப்படுகின்றது.

அந்நிய செலாவணி அதிகரிக்கும் வரை வாகனங்கள் தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படாதென்றே தோன்றுகின்றனர்.

இவ்வாறான நிலைமைக்கு மத்தியில் வாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றதென அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: