வாகனம் ஒன்றை கொள்வனவு செய்து 14 நாட்களுக்குள் உரிமை மாற்றாவிட்டால் 2000 ரூபா அபராதம் – போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த தெரிவிப்பு!

வாகனம் ஒன்றை கொள்வனவு செய்து 14 நாட்களுக்குள் உரிமையை தங்கள் பெயருக்கு மாற்றாவிட்டால் 2000 ரூபாய் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார் .
வாகனம் ஒன்றை கொள்வனவு செய்யும் சிலர் நீண்ட காலமாக வாகனத்தின் உரிமையை மாற்றாமல் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வாகனங்களின் உண்மையான பதிவு உரிமையாளரை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் வேறு ஒருவரிடமிருந்து வாகனம் ஒன்றை கொள்வனவு செய்தால் அதை உடனடியாக அவரது பெயரில் பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வடக்கின் தேசிய அடையாளங்களை மாற்றியமைக்க திட்டமிடும் வடக்கு மாகாண சபை!
கல்வி அதிகாரிகள், அதிபர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை!
மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் நாடு தள்ளப்படுவதை தடுக்க கடினமானதாக இருந்தாலும் சரியான முடிவுகளை ...
|
|