வாகனப் பதிவுகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிப்பு!

Tuesday, July 14th, 2020

வாகனப் பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த மே மாதம் 17313 வாகனம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த ஜுன் மாதம் 32123 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜுன் மாதம் வாகனப்பதிவானது இருமடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மக்கள் பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துவது குறைவடைந்துள்ளது.

இந்நிலையில் தனிப்பட்ட வாகனத்தில் பயணிக்கின்றமையினால் புதிய வாகனங்களின் பதிவுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: